இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார் மஹேல - News View

Breaking

Saturday, September 18, 2021

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார் மஹேல

இந்திய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மஹேல ஜயவர்த்தன நிராகரித்துள்ளார்.

“இலங்கை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு மட்டுமே பயிற்றுநராக இருக்க விரும்புகிறேன் ” என தனது நிராகரிப்பிற்கான காரணத்தை மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டிகளுடன் நிறைவுக்கு வருகின்றது.

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அனில் கும்ளேக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மஹேல ஜயவர்தனவிடம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment