கொழும்பில் பதிவு செய்யப்படாத சொத்துகள் தொடர்பில் மாநகர ஆணையாளரின் அறிவித்தல்‌ - News View

About Us

About Us

Breaking

Saturday, September 25, 2021

கொழும்பில் பதிவு செய்யப்படாத சொத்துகள் தொடர்பில் மாநகர ஆணையாளரின் அறிவித்தல்‌

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில்‌ காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத தனியார்‌ சொத்துக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர ஆணையாளர்‌ சட்டத்தரணி திருமதி. ரோஷணி திஸாநாயக்கவினால் குறித்த சொத்துரிமையாளர்களிடத்தில்‌ குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சொத்துகளின்‌ உரிமைகளை பாதுகாத்துக்‌ கொள்வதற்கு அச்சொத்துக்களை நகர சபையில்‌ பதிவு செய்திருக்க வேண்டியது அவசியமாகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநகர எல்லைக்கு‌ உட்பட்ட, இதுவரை பதிவு செய்யப்படாத சொத்துக்கள்‌ தொடர்பிலான தகவல்களை, கொழும்பு மாநகர சபையின்‌ colombo.mc.gov.lk எனும்‌ உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன்‌ மூலம்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

3 நாள் சேவையில் வழங்கப்படும் உரித்துரிமை தொடர்பான சான்றிதழின் சேவைக் கட்டணம்:

வர்த்தக கட்டடடங்களுக்கு ரூ. 3,500
வசிப்பிட கட்டடங்களுக்கு ரூ. 1,500

அது தொடர்பான விண்ணப்பப்படிவம் (AT Form) 

No comments:

Post a Comment