மன்னார் பிரதேச சபை தவிசாளர், அங்கத்துவ பதவிகளிலிருந்து முஜாஹிர் நீக்கம் - வட மாகாண ஆளுநர் சார்ள்ஸினால் அதி விசேட வர்த்தமானி - News View

Breaking

Monday, September 13, 2021

மன்னார் பிரதேச சபை தவிசாளர், அங்கத்துவ பதவிகளிலிருந்து முஜாஹிர் நீக்கம் - வட மாகாண ஆளுநர் சார்ள்ஸினால் அதி விசேட வர்த்தமானி

மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் சபை அங்கத்துவ பதவியிலிருந்து ஷாகுல் ஹமீத் மொஹமட் முஜாஹிர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைப்பாடு தொடர்பில் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் அடிப்படையில், ஆளுநர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, செப்டெம்பர் 14ஆம் திகதி தொடக்கம் பிரதேச சபை தவிசாளர் மற்றும் அங்கத்துவ பதவிகளிலிருந்து ஷாகுல் ஹமீத் மொஹமட் முஜாஹிர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment