குடிநீர் கட்டணத்தை செலுத்தினால் எதிர்கால செயற்பாடுகளுக்கு இலகு - கொரோனாவுக்கு மத்தியில் கட்டாயப்படுத்தவும் முடியாதுள்ளது - News View

About Us

About Us

Breaking

Monday, September 13, 2021

குடிநீர் கட்டணத்தை செலுத்தினால் எதிர்கால செயற்பாடுகளுக்கு இலகு - கொரோனாவுக்கு மத்தியில் கட்டாயப்படுத்தவும் முடியாதுள்ளது

பொதுமக்களுக்கு முடியுமான வகையில் குடிநீர் பாவனைக் கட்டணத்தை செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வேண்டுகோள் விடுப்பதுடன், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொதுமக்கள் கட்டணங்களை செலுத்தவதை கட்டாயப்படுத்தவும் முடியாதுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக குடிநீர் பாவனைக்கான கட்டணங்கள் ‍செலுத்துவது 60 சத வீதமாக குறைந்துள்ளது.

இதனால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எதிர்காலத்தில் கடும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதுடன் எதிர்காலத்தில் சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஒரு சிலர் மாத்திரமே ஒன்லைன் மூலமாக கட்டணங்களை செலுத்தி வருவதுடன், ஏனையோர் கட்டணங்கள் செலுத்துவதை தாமதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நீர் பாவனையாளர்களிடமிருந்து கட்டணங்களை அறிவிடுவதற்கான வழிகாட்டல் முறைமையொன்றை நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்மை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment