அரசியல் அழுத்தங்களே மத்திய வங்கி ஆளுநர் பதவி விலகக் காரணம் என்கிறார் எரான் விக்கிரமரத்ன - News View

About Us

About Us

Breaking

Sunday, September 12, 2021

அரசியல் அழுத்தங்களே மத்திய வங்கி ஆளுநர் பதவி விலகக் காரணம் என்கிறார் எரான் விக்கிரமரத்ன

(எம்.மனோசித்ரா)

இலங்கை மத்திய வங்கி என்பது அரச நிறுவனம் அல்ல. அது சுயாதீன நிறுவனமாகும். எனவே இவ்வாறான சுயாதீன நிறுவனங்களுக்கு உயர் அதிகாரிகளாக நியமிக்கப்படுபவர்கள் அரசியல் அழுத்தங்கள் காரணமாக தமது பதிவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவி விலகுவது பொறுத்தமானதல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

மேலும் அஜித் நிவாட் கப்ராலுக்கு மத்திய வங்கி ஆளுனர் நியமனத்தை வழங்க முன்னர் 2002 – 2015 காலப்பகுதியில் மத்திய வங்கி விவகாரங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீரவினை வழங்க வேண்டும் என்றும் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய வங்கி என்பது அரச நிறுவனம் அல்ல. அது சுயாதீனமாக இயங்கும் ஒரு நிறுவனமாகும். எனவே இவ்வாறான சுயாதீன நிறுவனங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுபவர்கள் அரசியல் அழுத்தங்களுக்காக பதவி விலகுவது பொறுத்தமானதல்ல. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட அவர்கள் தமது பதவிக்காலம் நிறைவடைய முன்னர் பதவி விலகக்கூடாது.

மத்திய வங்கி ஆளுனர் நியமனத்தை அஜித் நிவாட் கப்ராலுக்கு வழங்க முன்னர் 2002 - 2015 ஆம் ஆண்டு வரை மத்திய வங்கியின் விவகாரங்கள் தொடர்பில் கடந்த 2019 நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment