உணவு விநியோகம், பதுக்கலுக்கு எதிரான அவசரசால விதிமுறைகள் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு : பிற்பகல் வாக்கெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

உணவு விநியோகம், பதுக்கலுக்கு எதிரான அவசரசால விதிமுறைகள் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு : பிற்பகல் வாக்கெடுப்பு

அத்தியாவசிய உணவு விநியோகம் மற்றும் பதுக்கலை தடுப்பது தொடர்பான அவசரகால விதிமுறைகள் இன்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் அண்மையில் இது தொடர்பில் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு தொடர்பான விதிமுறைகளே இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான விவாதம் இன்று (06) பிற்பகல் 4.30 வரை இடம்பெறவுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாரம் பாராளுமன்றம் இன்றும் (06) நாளையும் (07) இரு நாட்களுக்கு கூடுமென்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய பொருட்களின் விலையை வேண்டுமென்றே உயர்த்தும் மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த சட்டம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், லசந்த அலகியவன்ன தெரவித்திருந்தார்.

இதன் மூலம் தனிநபருக்கான உச்சபட்ச அபராதம் ரூபா 20,000 இலிருந்து ரூபா 10 இலட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறுவனத்திற்கு உச்சபட்ச அபராதம் ரூபா 200,000 இலிருந்து ரூபா 1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனிநபருக்கான குறைந்தபட்ச அபராதம் ரூபா 1,000 இலிருந்து ரூபா 10,000 ஆகவும், நிறுவனத்திற்கான குறைந்தபட்ச அபராதம் ரூபா 10,000 ரூபாவிலிருந்து ரூபா 5 இலட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment