சீல் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையை திறந்து சீனி விற்பனை செய்த மூவர் கைது! - News View

Breaking

Friday, September 10, 2021

சீல் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையை திறந்து சீனி விற்பனை செய்த மூவர் கைது!

(எம்.எப்.எம்.பஸீர்)

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் சீல் வைக்கப்பட்ட, கடவத்தை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சீனி களஞ்சியசாலை ஒன்றை, அனுமதியின்றி திறந்து சீனி விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அக்ககளஞ்சியசாலையின் ஊழியர்கள் மூவரை 530 மில்லியன் ரூபா பெறுமதியான சீனி தொகையுடன் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

பரகந்தெனிய - இம்புல்கொட, வத்தளை - எலகந்த, வவுனியா - நாவற்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 32, 27 வயதுகளை உடைய மூவரையே இவ்வாறு கைது செய்ததாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment