சீனாவின் சேதன உரத்தில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய பாரதூரமான பக்றீரியாக்கள் - அஜித் பி பெரேரா - News View

About Us

About Us

Breaking

Sunday, September 19, 2021

சீனாவின் சேதன உரத்தில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய பாரதூரமான பக்றீரியாக்கள் - அஜித் பி பெரேரா

எம்.மனோசித்ரா

சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் எனக்கூறப்படும் உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய பாரதூரமான பக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் எனக் கூறப்படும் உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக் கூடிய அபாயமான இரு பபக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பக்றீரியாக்கள் பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதோடு, அவற்றால் ஏற்படக்கூடிய நோய்க்கு மருந்தும் கிடையாது. இவ்வாறான 95000 மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி செய்யப்படவிருந்ததோடு, இதற்காக 63 மில்லியன் டொலர் செலவிடப்படவிருந்தது என்றார்.

No comments:

Post a Comment