பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய - News View

About Us

About Us

Breaking

Thursday, September 2, 2021

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய

(நா.தனுஜா)

கொவிட்-19 வைரஸின் புதிய திரிபுகள் நாட்டிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் எந்தவொரு நாட்டிலும் இல்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதிதீவிர எல்லைக்கட்டுப்பாடுகள் மற்றும் அதிக எண்ணிக்கையான பரிசோதனைகளின் ஊடாக புதிய திரிபுகள் உள் நுழைவதையும் அவை வேகமாகப் பரவுவதையும் கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதாரக் கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கும் கொவிட்-19 வைரஸின் புதிய திரிபு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையில் அடையாளங்காணப்படலாம்.

புதிய வைரஸ் திரிபொன்று குறித்தவொரு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான பொறிமுறைகள் எந்தவொரு நாட்டிலும் இல்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது கூறியிருந்தார்.

அது குறித்த செய்தியை மேற்கோள்காட்டி வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment