இலங்கையில் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா, நீக்குவதா? - தீர்மானம் நாளை - News View

About Us

About Us

Breaking

Thursday, September 2, 2021

இலங்கையில் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா, நீக்குவதா? - தீர்மானம் நாளை

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை நீடிப்பதா? அல்லது நீக்குவதா? என்பது தொடர்பான தீர்மானம் நாளையதினம் கொவிட்-19 தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்படும்.

இந்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி விதிக்கப்பட்ட 10 நாள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு, சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளைத் தொடர்ந்து செப்டம்பர் 06 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை தொடர்பான உலக சுகாதா ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவினர் தற்போதைய முடக்கல் நிலையை எதிர்வரும் ஒக்டோபர் 2 வரை அல்லது குறைந்தபட்சம் செப்டெம்பர் 18 வரை நீடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

இந்த பரிந்துரை செயற்படுத்தப்பட்டால் கொவிட்-19 தொற்றிலிருந்து ஆயிரக்கணக்காண உயிர்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment