அரசிலிருந்து விலகும் எந்த முடிவும் இல்லை, எடுக்கப்படவுமில்லை என்கிறார் மைத்திரி - News View

Breaking

Thursday, September 2, 2021

அரசிலிருந்து விலகும் எந்த முடிவும் இல்லை, எடுக்கப்படவுமில்லை என்கிறார் மைத்திரி

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய முன்னணி ஒன்றை உருவாக்கப் போவதாக கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பில் கட்சித் தலைவரான மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் பேராசிரியர் ரோஜர் லக்ஷ்மன் பியதாச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான முன்னணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70ஆவது வருட நிறைவு நினைவு கூறப்படும் நிலையில் நேற்றைய தினம் பொலநறுவையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் அது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான முன்னணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரதித் தலைவர் லக்ஷ்மன் பியதாச கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment