மஹிந்த சமரசிங்கவின் பதவி விலகல் குறித்து பொதுஜன பெரமுன பொதுச் செயலாளரின் அறிவிப்பு - News View

Breaking

Saturday, September 18, 2021

மஹிந்த சமரசிங்கவின் பதவி விலகல் குறித்து பொதுஜன பெரமுன பொதுச் செயலாளரின் அறிவிப்பு

இராஜதுரை ஹஷான்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளமை அறிய முடிகிறது. இருப்பினும் இதுவரையில் கட்சிக்கு இத்தீர்மானங்கள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இவர் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்னர் இவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டதாகவும், அதன் போது அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் அறிய முடிகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரனை முன்வைக்கப்பட்ட போது அப்பிரேரனையை தோற்கடிப்பதற்கு முன்னின்று செயற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி விடுத்த கோரிக்கை இவர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கான ஆவணங்கள் தயார்படுத்தப்படுவதாகவும் அறிய முடிகிறது என்றார்.

No comments:

Post a Comment