தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்கள பணிப்பாளர் நாயகம் இராஜினாமா - News View

Breaking

Thursday, September 9, 2021

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்கள பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, தனது பதவி விலகல் கடிதத்தை தன்னிடம் இஷினி விக்ரமசிங்க ஒப்படைத்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனிப்பட்ட காரணத்திற்காக அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment