தோப்பூரில் கர்ப்பிணிப் பெண் கொரோனாவுக்கு பலி - குழந்தை காப்பாற்றப்பட்டது - News View

Breaking

Tuesday, September 7, 2021

தோப்பூரில் கர்ப்பிணிப் பெண் கொரோனாவுக்கு பலி - குழந்தை காப்பாற்றப்பட்டது

வீரமா நகர், தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் ராதா எனும் 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் நேற்று உயிரிழந்தார்.

அது குறித்து மேலும் தெரியவருவது, குறித்த கர்ப்பிணிப் பெண் கொரோணாத் தொற்றுக்குள்ளான நிலையில் வெளியில் சொல்ல முடியாமல் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

இதன்போது அவருக்கு நோயின் தாக்கம் அதிகரித்து சுய நினைவற்ற நிலையில் நேற்று முன்தினம் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று திங்கட்கிழமை (06) அதிகாலையில் சத்திர சிகிச்சையின் மூலமாக பிரசவம் நடைபெற்ற போதிலும் அவர் உயிரிழந்த நிலையில்,.குழந்தை காப்பாற்றப்பட்டது.

குறித்த தாய்க்கு ஏற்கனவே நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். கொரோனாத் தொற்றுத் தொடர்பான விளக்கமின்மை மற்றும் உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கத் தவறியமை போன்ற காரணிகளினால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment