விடுதலை புலிகளால் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐ.நா ஏன் அவதானம் செலுத்தவில்லை - அமைச்சர் வாசுதேவ - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

விடுதலை புலிகளால் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐ.நா ஏன் அவதானம் செலுத்தவில்லை - அமைச்சர் வாசுதேவ

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நடுநிலையான தன்மையில் காணப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஏன் அவதானம் செலுத்தவில்லை. என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தொடர்பில் விவாதம் ஒவ்வொரு முறையும் இடம்பெறுகிறது. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஒருதலைப்பட்சமாக செயற்படுகின்றமை பல விடயங்கள் ஊடாக வெளிப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நடுநிலையானதாக காணப்பட வேண்டும். ஆனால் தற்போது மனித உரிமைகள் பேரவை தனது பொதுக்கொள்கைக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறது.

30 வருட கால யுத்தம் ஒரு இனத்திற்கு மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இலங்கை மக்கள் அனைவருக்கும் பல்வேறு வழிமுறையில் பாதிப்பை ஏற்படுத்தியது.விடுதலைப் புலிகள் அமைப்பினை பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல் குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றஞ் சாட்டுபவர்கள் இலங்கையில் வாழ்பவர்கள் அல்ல.

புலம் பெயர் அமைப்புக்கள் தங்களின் சுய தேவைக்காக ஐக்கிய நாடுகள்மனித உரிமைகள் பேரவையை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். யுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட துரிதகர அபிவிருத்தி குறித்து இவர்கள் கருத்துரைப்பதில்லை.

இராணுவத்தினர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து கவனம் செலுத்த வில்லை.

யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தரப்பினரால் இடம்பெற்ற குற்றங்களை அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கு என கருத முடியாது. என்றார்.

No comments:

Post a Comment