அட்டையில் பதிவிட்டுக் கொண்டு தடுப்பூசி பெறாமல் நழுவ முயன்றோர் கைது - காலியில் சம்பவம் - News View

Breaking

Friday, September 10, 2021

அட்டையில் பதிவிட்டுக் கொண்டு தடுப்பூசி பெறாமல் நழுவ முயன்றோர் கைது - காலியில் சம்பவம்

காலி பிரதேசத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையமொன்றில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டதாக தமக்கான அட்டைகளில் தாமே பதிவு செய்து கொண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாமலேயே வெளியேறிச் செல்ல முனைந்த தரப்பினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

காலி சங்கமித்த மகளிர் வித்தியாலய தடுப்பூசி நிலையத்தில் நேற்று முன்தினம் சைனோபாம் முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போதே மேற்படி நபர்கள் அவ்வாறு செயற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்தரப்பினர் தம்மிடமிருந்த அட்டைகளில் தாம் தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக பதிவு செய்துவிட்டு அங்கிருந்து வெளியேற முனைந்தபோது பாதுகாப்பு அதிகாரிகளினால் அவர்கள் கண்காணிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment