அனைத்து வகை கொரோனா தடுப்பூசிகளும் சமமான பாதுகாப்பும் பயனும் என்கிறார் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் - News View

Breaking

Friday, September 10, 2021

அனைத்து வகை கொரோனா தடுப்பூசிகளும் சமமான பாதுகாப்பும் பயனும் என்கிறார் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான கொரோனா தடுப்பூசிகளும் சமமான பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில், வணிக நோக்கங்களுக்காக தடுப்பூசிகளில் ஒப்பீடுகள் செய்யப்படுகின்றன என்றார்.

ஒரு தடுப்பூசியின் வர்த்தக நாமமானது மற்றொன்றை விட உயர்ந்தது அல்ல, இது வெறும் சந்தைப்படுத்தல் வித்தை என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நிர்வகிக்கப்படும் தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி குறித்த முடிவுகள் இரண்டு நிபுணர் குழுக்களினாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து தடுப்பூசி வகைகளையும் அவசர பயன்பாட்டிற்காக உலக சுகாதார ஸ்தாபானம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment