சந்திம வீரக்கொடி எம்பிக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, September 25, 2021

சந்திம வீரக்கொடி எம்பிக்கு கொரோனா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடிக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதால் நேற்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அவரை ஹிக்கடுவையில் உள்ள தனிமைப்படுத்தல் மையமொன்றிற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment