ஏறாவூர் பொ லிஸ் பிரிவில் தோணி ஊடாக கசிப்பு கடத்தியவர் கைது : ஒருவர் தப்பியோட்டம் - News View

Breaking

Tuesday, September 7, 2021

ஏறாவூர் பொ லிஸ் பிரிவில் தோணி ஊடாக கசிப்பு கடத்தியவர் கைது : ஒருவர் தப்பியோட்டம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை பிரதேசதத்தில் இருந்து வாவி ஊடாக தோணியில் மொறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்துக்கு வியாபாரத்துக்காக கொண்டுவரப்பட்ட கசிப்புடன் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை கைது செய்துள்ளதுடன் ஒருவர் தப்பி ஓடியுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே பண்டார தெரிவித்தார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே பண்டார தலைமையிலான பொலிஸார் சம்பவத்தினமான இன்று அதிகாலை 3.30 மணிக்கு மொறக்கொட்டாஞ்சேனை வாவி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது வாவியில் இரு தோணியில் இருவர் கசிப்புக்களை கலன்களில் எடுத்துக் கொண்டு வந்து கரை ஓதுங்கியபோது அவர்களை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர். இதன் போது ஒருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் ஒருவரை 80 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளதுடன் இரண்டு தோணிகளை மீட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் மற்றும் கசிப்பு தோணிகளை ஏறாவூர் பொலிஸாரிடம் ஓப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தப்பி ஒடியவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment