சீனாவில் மீண்டும் கொரோனா ‍அலை : ஆசிரியர்கள், மாணவர்கள் மருத்துவ சோதனைக்கு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

சீனாவில் மீண்டும் கொரோனா ‍அலை : ஆசிரியர்கள், மாணவர்கள் மருத்துவ சோதனைக்கு உத்தரவு

சீனாவின் தென்கிழக்கு மாகாணமான புஜியனில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் புதிய கொவிட்-19 பரவல் பதிவாகியுள்ளது.

ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தந்‍தை கடந்த வாரம் கொரோனா தொற்றுக்குள்ளானர். இந்நிலையில் அவருடனான தொடர்புகள் காரணமாக இந்த புதிய பரவல் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புஜியான் மாகாணத்தில் நான்கு நாட்களில் மொத்தம் 102 சமூக நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு வாரத்திற்குள் மருத்துவ சோதனைக்கு உட்பட வேண்டும் என்று புஜியான் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சீனாவில் நான்ஜிங் வெடித்த கொவிட்-19 பரவலின் ஒரு மாதத்திற்குப் பிறகு அண்மைய கொரோனா அலை உருவாகியுள்ளது.

புஜியான் மாகாணத்தில் உள்ள புட்டியன் நகரம் - சுமார் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் பகுதியாகும். இது மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக தற்சமயம் மாறியுள்ளது.

No comments:

Post a Comment