எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா! - News View

Breaking

Saturday, September 11, 2021

எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் சுகயீனம் காரணமாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர் என்ற காரணத்தினால் எம்.கே. சிவாஜிலிங்கம், அம்புலன்ஸில் கோப்பாய் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment