களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருக்கு கொவிட் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி - News View

Breaking

Wednesday, September 8, 2021

களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருக்கு கொவிட் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

(எம்.எப்.எம்.பஸீர்)

களுபோவில வைத்தியசாலை என அறியப்படும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் மன்றத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷான் பெல்லன, சுகயீனம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியர் ருக்ஷானின் நிலைமை சற்று மோசமாக உள்ள நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

No comments:

Post a Comment