இலங்கை மத்திய வங்கி ஆளுநர் லக்ஸ்மன் பதவி விலகுவதாக அறிவிப்பு - மீண்டும் அஜித் நிவார்ட் கப்ரால் - News View

Breaking

Friday, September 10, 2021

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் லக்ஸ்மன் பதவி விலகுவதாக அறிவிப்பு - மீண்டும் அஜித் நிவார்ட் கப்ரால்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்‌ஸ்மன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இன்று (10) ஒன்லைன் மூலமாக இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

தான் எதிர்வரும் செப்டெமம்பர் 14 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் தற்போது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள, அஜித் நிவார்ட் கப்ரால், தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்து, மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஸ்மன் இலங்கை மத்திய வங்கியின் 15ஆவது ஆளுநராக கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad