நாட்டை ஆள்வது அரிசி உற்பத்தி உரிமையாளர்களா, ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கமா என்ற சந்தேகம் - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

நாட்டை ஆள்வது அரிசி உற்பத்தி உரிமையாளர்களா, ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கமா என்ற சந்தேகம் - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு

(இராஜதுர ஹஷான்)

அரிசியின் விற்பனை விலை தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும். அரிசிக்கான நிர்ணய விலை இரத்து செய்யப்பட்டுள்ளமை அரிசி மாபியாக்களுக்கு சாதகமாக அமையும். நுகர்வோரின் நலன் குறித்து அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே குற்றஞ்சாட்டினார்.

அரிசியின் நிர்ணய விலை இரத்து செய்யப்பட்டுள்ளமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டை ஆள்வது பிரதான அரிசி உற்பத்தி உரிமையாளர்களா அல்லது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமா என்ற சந்தேகம் எழுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயத்தில் வியாபாரிகளும், இறக்குமதியாளர்களும் ஆதிக்கமுடையவர்களாக உள்ளார்கள்.

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல், சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, பின்னர் பொருட்கள் கைப்பற்றல், வியாபாரிகளின் நோக்கத்திற்கு அமைய பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் அரசாங்கம் கையாளும் தற்போதைய சூத்திரமாக காணப்படுகிறது. அரசாங்கத்தின் தீர்மானத்தினால் நுகர்வோர் பாதிக்கப்படுகிறார்கள், வியாபாரிகள் நன்மையடைகிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment