தடுப்பூசி ஏற்றிக் கொண்டாலும், சுகாதார வழிமுறைகளை சகல தரப்பும் பின்பற்றுவது அவசியம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

தடுப்பூசி ஏற்றிக் கொண்டாலும், சுகாதார வழிமுறைகளை சகல தரப்பும் பின்பற்றுவது அவசியம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(ஆர்.யசி)

கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியிலேயே நாடு திறக்கப்படுகின்றது. தடுப்பூசி ஏற்றிக் கொண்டாலும் நாம் நூறு வீதம் பாதுகாப்பாக உள்ளோம் என கருத முடியாது. எனவே சுகாதார வழிமுறைகளை சகல தரப்பும் பின்பற்றுவது அவசியமானதாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து புதிய வைரஸ் தொற்றுகளை நாட்டுக்குள் கொண்டுவராது சுற்றுலாத் துறையை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமையை அடுத்து கடந்த நாற்பத்து இரண்டு நாட்களாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை அதிகாலை நான்கு மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில்,நாட்டின் பொது சுகாதார செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

No comments:

Post a Comment