புகை பிடித்தால் கொரோனா தீவிரமாகும், மரணமும் வரும் - ஆய்வில் தகவல் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

புகை பிடித்தால் கொரோனா தீவிரமாகும், மரணமும் வரும் - ஆய்வில் தகவல்

இங்கிலாந்தில் ஓக்ஸ்போர்ட், பிரிஸ்டல், நாட்டிங்ஹாம் ஆகிய பல்கலைக்கழகங்களின்  ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக சீனாவில் தோன்றி பரவினாலும், இன்றைக்கு 200 க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக உலகமெங்கும் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இங்கிலாந்தில் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் (கிளிப்ட்) ஒரு ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதன் முக்கிய தகவல்கள் வருமாறு
புகை பிடித்தால் இதய நோய், புற்று நோய் உட்பட பிற நோய்கள் பாதிப்பதுபோலவே கொரோனாவும் தீவிரமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே புகை பிடிப்பதை கைவிடுவதற்கு இது ஏற்ற தருணமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 469 பேரை ஆராய்ந்ததில் புகை பிடிப்பதற்கும், கொரோனா தீவிரம் அடைவதற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில் புகை பிடிப்போருக்கு கொரோனா பாதிக்கிறபோது, ஆஸ்பத்திரியில் சேர்க்கிற வாய்ப்பு 80 சதவீதம் அதிக வாய்ப்பு உள்ளது. இவர்கள் இறக்கவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment