(எம்.மனோசித்ரா)
ரஞ்சன் ராமநாயக்க விவகாரத்தை அரச தலைவரோ அல்லது அரசாங்கமோ தனிப்பட்ட ரீதியில் இந்த விடயத்தை அவதானிக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். எனவே நாம் அது தொடர்பில் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை இணையவழியூடாக நடைபெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ரஞ்சன் ராமநாயக்க தவறிழைத்தமையால் அவருக்கான தண்டனை கிடைக்கப் பெற்றது என்பது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
ஒரு இலட்சத்து 50,000 மக்களின் விருப்பத்தில் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட அவரது பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. இது பிரஜையொருவருக்கு வழங்கப்படக் கூடிய பாரதூரமான தண்டனையாகும்.
அரச தலைவரோ அல்லது அரசாங்கமோ தனிப்பட்ட ரீதியில் இந்த விடயத்தை அவதானிக்கவில்லை என்பதை நான் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன். எனவே நாம் அது தொடர்பில் ஆக்கபூர்வமாக சிந்திப்போம் என்றார்.
No comments:
Post a Comment