தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைதலுடன், ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைய வாய்ப்புள்ளது - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைதலுடன், ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைய வாய்ப்புள்ளது - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

(எம்.மனோசித்ரா)

தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைதலுடன், ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைய வாய்ப்புள்ளது. எவ்வாறிருப்பினும் தொடர்ந்தும் ஒட்சிசன் கையிருப்பை பேணுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் பட்சத்தில் வெளிநாடுகளிலிருந்து ஒட்சிசனை இறக்குமதி செய்வதை தவிர்த்து, தேசிய உற்பத்தியைக் கொண்டு முகாமைத்துவம் செய்யக்கூடியதாக இருக்கும்.

மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான சகல பரிந்துரைகளும் உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்படும்.

நாம் எதிர்பார்த்த மட்டத்திற்கு தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைதலுடன், ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைய வாய்ப்புள்ளது.

இவ்வாறான தொற்று நிலைமையின்போது வைரஸ் பரவலானது சில சந்தர்ப்பங்களில் குறைவடையும். சில சந்தர்ப்பங்களில் அதிகரிக்கும். அதன் அடிப்படையில்தான் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதா என்பதை ஸ்திரமாகக் கூற முடியாது என்றார்.

No comments:

Post a Comment