பொதுமக்களிடம் உதவியை நாடும் பொலிஸார் - News View

Breaking

Wednesday, September 8, 2021

பொதுமக்களிடம் உதவியை நாடும் பொலிஸார்

ஆகஸ்ட் மாதம் பேருவளை கடற்கரையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலின் முக்கிய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸ்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

போதைப் பொருள் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய சந்தேகநபர் களுத்துறை சமிந்தா டாப்ரூ / களுத்துறை பாப் மார்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தெற்கு கடற்பகுதியில் கடந்த ஆகஸ்ட் 30 அன்று இலங்கை கடற்படையினர் நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போது சுமார் 290 கிலோ மற்றும் 200 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது. இவற்றின் பெறுமதி 290 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டது.

இந்த கடத்தல் முயற்சி தொடர்பாக 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடத்தலின் முக்கிய சந்தேக நபர் களுத்துறை பாப் மார்லி என தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே பிரதான சந்தேக நபரின் புகைப்படத்தை வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பொலிஸார், சந்தேகநபர் குறித்த தகவல் தெரிந்தால் கீழ்க்கண்ட ஹாட்லைன் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொலைபேசி இலக்கம் : 071 8592727 / 0112 343333-4

No comments:

Post a Comment