ரஷ்யாவில் சோகம்...! தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 8, 2021

ரஷ்யாவில் சோகம்...! தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த அமைச்சர்

ரஷ்யாவின் அவசரகாலத்துறை அமைச்சர் யெவ்கேனீ ஸீனிட்செஃப், நோரீல்ஸ் என்ற இடத்தில் உள்ள செங்குத்தான பாறையில் கால் தவறி கீழே விழுந்த நபரை காக்கும் முயற்சியின்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 55. இத்தகவலை அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஆர்டிக் பகுதி, ஏழு பிராந்தியங்கள் முழுமையாக நீளுகிறது. அந்த பிராந்தியத்தின் வளர்ச்சிப் பணிகளை கவனிப்பது யெவ்கேனீயின் பொறுப்பு. இந்த நிலையில அந்த பிராந்தியத்தில் ஆபத்து காலங்களில் மக்கள் எதிர்கொள்வது எப்படி என்ற ஒத்திகையில் ரஷ்ய வீரர்களுடன் சேர்ந்து சுமார் ஆறாயிரம் பேர் ஈடுபட்டனர்.

இத்தனை பேருடன் அசாதாரணமான ஓர் பயிற்சி இதற்கு முன்பு அங்கு நடந்ததில்லை.

ரஷ்ய தொலைக்காட்சியான ஆர்டியின் தலைமை அதிகாரி மார்கரிடா சைமோன்யானின் தகவலின்படி, செங்குத்தான பாறை மீது பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் யெவ்கேனீ ஸீனிட்செஃப். அவருடன் இயக்குநர் அலெக்சாண்டர் மெல்னிக் இருந்தார்.

அப்போது கால் வழுங்கியதில் மார்கரிட்டா சைமோன்யான் பின்னால் இருந்த தண்ணீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற முற்பட்ட முயற்சியில் யெவ்கேனியும் உயிரிழந்தார். அவருக்கு முன்பாகவே சைமோன்யானும் இறந்தார்.

ரஷ்யாவில் ஜனாதிபதி விளாதிமீர் புதின் அமைச்சரவையில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தவர் யெவ்கேனீ. ரஷ்ய அவசரகாலத்துறை அமைச்சராக அவர் 2018 முதல் இருந்தார் அவர்.

ரஷ்ய ஜனாதிபதியின் விரிவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனிக்கும் அதிகாரிகளில் யெவ்கேனியும் ஒருவர். தமது பணிக்காலத்தின் பெரும்பகுதியை அவர் தேச பாதுகாப்பு பணியிலேயே கழித்திருந்தார்.

சோவியத் கேஜிபி என்ற ரஷ்ய உளவுத்துறையில் பணியைத் தொடங்கிய அவர், படிப்படியாக அந்த துறையின் இரண்டாம் நிலைவரை உயர்ந்தார்.

ஜனாதிபதி புதினுடன் யெவ்கேனீ நீண்ட காலம் பணியாற்றியவர் அவரது மரணம், மிகப்பெரிய இழப்பு என்று ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப் கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குநர் மெல்னிக் ஒரு எழுத்தாளரும் கூட. ஆர்டிக் ஆவணப்படம் ஒன்றை எடுத்ததன் மூலம் 2015 இல் அவர் பிரபலம் அடைந்தார்.

ஆர்டிக் பிராந்தியத்திலும் ரஷ்யாவின் வடக்கு கடல் பகுதியிலும் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆவணப்படம் எடுக்கும் நோக்குடன் அவர் இங்கு வந்திருந்தார்.

கிராஸ்நோயார்ஸ் பிராந்தியத்தில் சம்பவம் நடந்த வேளையில் ஊடகக் குழுவினர் மக்கள் பயிற்சி செய்யும் காணொளியை பதிவு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment