தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது கட்டாயமா? - அதிகாரிகள் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது கட்டாயமா? - அதிகாரிகள் ஆராய்வு

கொவிட்-19 தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சட்ட ரீதியான விடயங்கள் உட்பட, அத்தகைய நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களும் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 

தடுப்பூசியை பெற வேண்டிய அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரே உரிய நடவடிக்கை அமுல்படுத்தப்படும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் நடமாடும் தடுப்பூசித் திட்டம் மூலம் மேலும் துரிதப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment