அதிபர், ஆசிரியர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

அதிபர், ஆசிரியர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியீடு

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான சுற்றுநிருபம் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி கடமையில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது கொடுப்பனவை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவுள்ள நிலையில் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் 5000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அது தொடர்பான சுற்றுநிறுபமே வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, அமைச்சரவை உப குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சேவை, அதிபர்கள் சேவை மற்றும் ஆசிரிய ஆலோசகர் சேவை ஆகியவற்றை இணைந்த சேவையாக பெயரிடப்படும் வர்த்தமானி எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி வெளியிடப்பட உள்ளதாகவும் ஏனைய பரிந்துரைகளை எதிர்வரும் ஆறு மாத காலங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு அதன் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment