கோறளைப்பற்று மத்தி கிராம சேவகர் பிரிவின் கிராமத்துடனான கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

கோறளைப்பற்று மத்தி கிராம சேவகர் பிரிவின் கிராமத்துடனான கலந்துரையாடல்

கிராமத்துடன் கலந்துரையாடல், கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலனியினால் 2022 ஆம் ஆண்டு பாதீட்டை அடிப்படையாகக் கொண்டு (வரவு செலவு திட்டம்) முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிற்கும் (3) மூன்று மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கும் கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அல்ஹாபிழ் நஸீர் அஹமட் அவர்களின் கோறளைப்பற்று மத்தி நிகழ்ச்சி திட்டத்தின் பிரதிநிதி எம்.ஜவாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேசத்திற்கான திட்ட முன்மொழிவு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அல்ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களின் 35 மில்லியன் ரூபாய் கல்குடா தொகுதிக்கான கிராமத்திற்கு 3 மில்லியன் மும்மொழிவு நிகழ்ச்சி திட்டதின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களின் ஆலோசனைக்கு அமைய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் அவர்களின் பங்கு பற்றுதலுடன் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மக்கள் மயமாக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் அப்பிரதேச மக்களிடத்தில் கலந்துரையாடி அவர்களின் வாழ்வாதார தேவைகளை அறிந்து செயற்படுத்திய பெருமை அல் ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களை சாரும்.

இந்நிகழ்வுகளில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் முஸம்மில், உதவி திட்டமிடல் பணிப்பாளர் றுவைத், மீன்பிடி பரிசோதகர் இம்தியாஸ், ஒவ்வொரு கிராம பிரதேசத்தில் கடமை புரியும் கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், மீன்பிடி சங்க பிரதிநிதிகள், அப்பிரதேச பயனாளிகள் என பலர் கலந்து கொண்டு இந் நிகழ்ச்சி திட்டத்தினை தயார் செய்தனர்.

எம்.எச்.எம். இம்ரான்  

No comments:

Post a Comment