பாவனைக்கு உதவாத பெருந்தொகை சீனி மீட்பு - News View

Breaking

Tuesday, September 7, 2021

பாவனைக்கு உதவாத பெருந்தொகை சீனி மீட்பு

(எம்.மனோசித்ரா)

வத்தளை பொலிஸ் பிரிவில் விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் பாவனைக்கு உதவாத 6,25,000 கிலோ கிராம் சீனி மற்றும் சீனி பாணி உள்ளிட்டவற்றை அனுமதியின்றி களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கம்பஹா நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

25 வயதுடைய மாபொல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment