பாராளுமன்றத்தில் நிறைவேறியது நிதிச் சட்டமூலம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 7, 2021

பாராளுமன்றத்தில் நிறைவேறியது நிதிச் சட்டமூலம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிதிச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

நிதி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 90 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 90 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இன்று முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் இறுதியில், தாங்கள் சட்டமூலத்தை எதிர்ப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி, சட்டமூலத்திற்கு எதிராக இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தெரிவித்தது. 

அதற்கமைய, எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி முற்பகல் 10.00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment