தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவூட்டும் வகையில் பாடசாலைக் கல்வியில் உள்வாங்கல் - News View

Breaking

Friday, September 10, 2021

தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவூட்டும் வகையில் பாடசாலைக் கல்வியில் உள்வாங்கல்

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் எதிர்காலத்தில் தொல்பொருள் சங்கங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினர் அறிந்து கொண்டு அது தொடர்பில் அவர்களிடையே சிறந்த சிந்தனையை ஏற்படுத்தும் நோக்கிலேயே அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தாம் கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அது சம்பந்தமாக பாடசாலை அதிபர்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக் கல்வி மூலம் தொல்பொருள் சம்பந்தமான அறிவை பெற்றுக் கொடுப்பது, அதுதொடர்பான விருப்பத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது மற்றும் அதன் முக்கியத்துவத்தை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பது அவசியமாகும்.

சட்டங்களை நடைமுறைப்படுத்துவது சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதன் மூலம் மாத்திரம் தொல் பொருட்களை பாதுகாக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment