ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார் ரஷித் கான் - News View

Breaking

Friday, September 10, 2021

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார் ரஷித் கான்

டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் பதவியை ரஷித் கான் இராஜினாமா செய்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும்போது அணித் தலைவர் என்ற முறையில் தேர்வுக் குழுவினர் தன்னிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தன்னிடம் கலந்து ஆலோசிக்காமலேயே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

ரஷித் கான் அணித் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் புதிய அணித் தலைவராக முகம்மது நபி செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad