(எம்.மனோசித்ரா)
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னரே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இதுவரையில் பதிவாகியுள்ள மரணங்களில் 50 வீதத்தை தவிர்த்திருக்கலாம். எனவே ஊரடங்கு சட்டத்தினை மேலும் ஒரு வாரத்திற்கேனும் நீடிக்க வேண்டும் என்று அரச தாதிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதால் கொவிட் பரவல் நிலைமை கணிசமானளவு குறைவடைந்துள்ள போதிலும், ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வாரத்திற்கேனும் நீடிக்கப்பட வேண்டும்.
நாடு முடக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதமாக முன்னெடுத்திருக்க வேண்டும். எனினும் அரசாங்கம் அதில் தோல்வியடைந்துள்ளது.
No comments:
Post a Comment