ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெர்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஞாயிறன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபத ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது அன்டோனியோ குட்டெர்ஸை இலங்கைக்கான ஐ.நா.வின் முழுமையான ஒத்துழைப்பை உறுதி செய்துள்ளார்.
செப்டம்பர் 21 ஆம் திகதி தொடங்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய தற்போது நியூயார்க்கிற்கு சென்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி ஆற்றும் முதல் உரை இதுவாகும்.
No comments:
Post a Comment