ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரியும் காலத்தை நீடித்தது கூகுள் நிறுவனம் - News View

Breaking

Wednesday, September 1, 2021

ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரியும் காலத்தை நீடித்தது கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை வீட்டில் இருந்தே பணி புரியலாம் எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா ஒரு தொற்று நோய் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக சுகாதார ஸ்தாபனம்  அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பெரும்பாலான நாடுகளும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தன.

இதனால் சிறு நிறுவனம் முதல் கூகுள், பேஸ்புக் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் உட்பட ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிய கேட்டுக் கொண்டது. 

இந்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில் 2 ஆவது அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியை தொடர்ந்தனர்.

தற்போது 2 ஆவது அலை கட்டுக்குள் வந்துள்ளதாலும், பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்கி விட்டதாலும் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை பார்க்க கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் கூகுள் நிறுவனம் இன்னும் ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்யுமாறு அழைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்பட மாட்டார்கள். அழைக்கப்படுவதற்கு முன் சுமார் ஒரு மாதம் வரை கால அவகாசம் கொடுக்கப்படும் என அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுந்தர் பிச்சை கூறுகையில் ‘‘ஏராளமான உலகளாவிய நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாங்கள் எங்களுடைய 10 ஆயிரம் ஊழியர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வரவேற்க இருக்கிறோம் என்பதை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட இதற்கான ஏற்பாடுகள் சற்று தொலைவில் உள்ளன. இருந்தாலும் அதற்காக நாங்கள் ஒன்றிணைவோம்’’ என்றார்.

மேலும், அலுவலகத்திற்கு அழைக்கப்படுவதற்கு முன் 30 நாட்கள் கால அவகாசம் கொடுப்போம். ஓக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கூடுதல் ஓய்வு நாட்களை அவர்கள் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment