மஹியங்கனை வைத்தியசாலையில் 50 படுக்கைகளைக் கொண்ட தற்காலிக கொவிட் சிகிச்சை விடுதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 1, 2021

மஹியங்கனை வைத்தியசாலையில் 50 படுக்கைகளைக் கொண்ட தற்காலிக கொவிட் சிகிச்சை விடுதி

இரா.சுரேஸ்குமார்

பதுளை மாவட்டத்தில் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மஹியங்கனை வைத்தியசாலையில் போதுமான வசதிகள் காணப்படவில்லை.

இந்நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக 50 படுக்கைளைக் கொண்ட தற்காலிக சிகிச்சை விடுதிகள் இராஜாங்க அமைச்சர் தேனுகா விதானகமகேவின் வேண்டுகோளில் நிதி உதவி பெறப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கொவிட்19 தொற்றாளர்களுக்காக அமைக்கப்பட்ட 50 படுக்கைகளைக் கொண்ட சிகிச்சை விடுதிகள் நேற்று காலை மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் செனரத் பண்டாரவிடம் கையளிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில், புதிய கொவிட் சிகிச்சை விடுதிகள், மருத்துவ உபகரணங்கள் உட்பட நோயாளிகளுக்கு வசதியாக நன்கொடைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிராமப்புற மற்றும் பள்ளி விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுகா விதானகம, ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் அனுர விதானகமகே, அப்பகுதியின் அரசியல் தலைமை, ஊவா தலைமை செயலாளர் பி.பி. விஜேரத்ன, பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம, ஊவா மாகாணசபை செயலாளர் மங்கள விஜேநாயக்க, ஊவா மாகாண சுகாதார செயலாளர் தயானந்த ரத்நாயக்க, மஹியங்கனை பிரதேச செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment