அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த விற்பனைக்காக திறப்பு - News View

Breaking

Friday, September 10, 2021

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த விற்பனைக்காக திறப்பு

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் மொத்த விற்பனைக்காக இன்று முதல் தொடர்ந்து திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் அவர்களது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு வசதியாகவும் அதேவேளை மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையிலும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை போயா தினம் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் பொருளாதார மத்திய நிலையங்களை விற்பனை நடவடிக்கைகளுக்காக திறந்து வைக்கும் தீர்மானம் நேற்றைய தினம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றுள்ள கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி அமர்வின்போதும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment