பெரும்பான்மை அரசியல் சக்திகளைப் பகைத்துக் கொண்டு வீறாப்புப் பேசித் திரிவதால் சிறுபான்மை சமூகத்திற்குப் பிரயோசனம் இல்லை - நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 19, 2021

பெரும்பான்மை அரசியல் சக்திகளைப் பகைத்துக் கொண்டு வீறாப்புப் பேசித் திரிவதால் சிறுபான்மை சமூகத்திற்குப் பிரயோசனம் இல்லை - நஸீர் அஹமட்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

பெரும்பான்மை அரசியல் சக்திகளைக் கடுப்பேற்றி அவர்களைப் பகைத்துக் கொண்டு வீறாப்புப் பேசித் திரிவதால் சிறுபான்மை சமூகத்திற்கு எந்தவித பிரயோசனமும் இல்லை என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஹெலிகொப்டர் விபத்தில் பலியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் அஷ்ரப் அவர்களின் 21வது நினைவு தின வைபவமும் துவா பிரார்த்தனை நிகழ்வும் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் அலுவலகத்தில் சனிக்கிழமை 18.09.2021 மாலை இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் தொண்டர்கள் மார்க்கத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த பிரார்த்தனை நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் பெரும்பான்மை சமூகத்தோடு பிணங்கிக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கம் ஒன்று இருக்கும் நிலையிலும் தேசிய ஐக்கிய முன்னணி என்ற ஒரு கட்சியை மறைந்த தலைவர் ஸ்தாபித்து முன்கொண்டு சென்றார்.

எனவே அதுவே பெரும்பான்மையோடு நாம் முரண்பட்டுக் கொள்ளத் தேவையில்லை என்பதற்கு நமக்கு ஒரு படிப்பினையாக அமைந்திருந்தது.

எப்படிப் பார்த்தாலும் இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாரிய அரசியல் சக்திகள் இருக்கின்றன.

இந்த இரண்டு சக்திகளுடனும் முஸ்லிம் சமூகம் இணைந்து இரண்டு பக்கங்களிலும் எங்களுடைய அரசியல் பலத்தைத் தக்கவைத்துக் கொண்டு காய் நகர்த்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது. அதுதான் எங்களுக்குரிய பாதுகாப்பும் உத்தரவாதமுமாகும்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தேசிய அரசியலில் பங்காளியாகவும் தாக்கம் செலுத்தும் ஒரு சக்தியாகவும் முஸ்லிம் சமூகம் தனது அரசியல் பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் சரியாக எமது அரசியல் சாணக்கியத்தைக் கையாண்டிருந்திருந்தால் முஸ்லிம் சமூகம் யாருக்கும் தலை குனிய வேண்டிய தேவையே இருந்திருக்காது.

இரு பக்கங்களிலும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலம் இருந்தால் எம்மை யாரும் இலேசில் புறந்தள்ளிவிட முடியாது.

நமது அரசியல் வரலாற்றிலே முஸ்லிம்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்டே வந்துள்ளோம்.

அதனால் ஒரு சாராரின் ஆட்சிக் காலத்தில் மட்டும்தான் முஸ்லிம் சமூகத்திற்கு அநியாயம் நடந்ததென்று விரல் நீட்டி விட முடியாது.

1990ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் தலைமையிலான போர் நிறுத்த சமாதான உடன்படிக்கைக் காலத்தின்போது சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் இருக்கும் நிலையில் வாழைச்சேனையில் பட்டப்பகலில் முஸ்லிம் மௌலவிமார் எரித்துக் கொல்லப்பட்டார்கள். இவற்றை முஸ்லிம் சமூகம் எளிதில் மறந்து விடக் கூடாது” என்றார்.

No comments:

Post a Comment