அம்பாந்தோட்டை மேயர் கைதாகி பொலிஸ் பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Sunday, September 19, 2021

அம்பாந்தோட்டை மேயர் கைதாகி பொலிஸ் பிணையில் விடுதலை

பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாக கைது செய்யப்பட்ட அம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (14) பம்பலப்பிட்டியில் உள்ள கொத்தலாவல ஒழுங்கையில் உள்ள காணி ஒன்றுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கியதாகக் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் கடமையாற்றும் சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் ஒருவர், பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இரண்டு வாகனங்களில் (SUV) வந்த எராஜ் பெனாண்டோ உள்ளிட்ட குழுவினர் எவ்வித காரணங்களுமுமின்றி குறித்த காணிக்குள் நுழைந்ததாகவும், அதன் பின்னர் அங்கிருந்த தான் உள்ளிட்ட இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் திட்டியதாகவும், அதன் பின்னர் இருவரையும் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க. எம்.பிக்கள் சிலர் அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்திற்கு விமான நிலையம் தொடர்பான தரவுகளின் ஆய்வுகளுக்காகச் சென்றபோது, துப்பாக்கியுடன் வந்து கற்கள், பொல்களால் தாக்கியமை தொடர்பில் அம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2014 ஏப்ரல் 17 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், அம்பாந்தோட்டை நகர சபையின் தலைவர் எராஜ் ரவீந்திர பெனாண்டோ மற்றும் முதலாவது பிரதிவாதியான ஹேமசிறி பரணமான்ன ஆகிய இருவருக்கும், கடந்த 2019 ஓகஸ்ட் 02ஆம் திகதி, அம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி சாமர தென்னகோன், 5 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்திருந்தார்.

இதன்போது தாம் விளையாட்டு துப்பாக்கியே அப்போது கொண்டு வந்திருந்ததாக நீதிமன்றிற்கு தெரிவித்தமை தொடர்பில் அப்போது அதிகம் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, அவரால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில், கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment