இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4200 ஒக்சி மீற்றர்கள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 8, 2021

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4200 ஒக்சி மீற்றர்கள் மீட்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ரூபா 23 இலட்த்து 44 ஆயிரத்து 642 (ரூ. 2,344,642) பெறுமதி கொண்ட Oximeter களை கடத்த முயன்ற சந்தேகநபருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொகுதியை சோதனையிட்ட போது, ​​21 பெட்டிகளில் 4,200 Oximeter கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடக பேச்சாளர், பிரதிப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியின்றி குறித்த தொகுதியை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முற்பட்டபோது சுங்க பிரிவினரால் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியின்றி குறித்த நகர்த்த முயன்ற போது சுங்க தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபருக்கு எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர், உரிய அனுமதி பெற்ற முகவராக தன்னை அடையாளப்படுத்தி, ஸ்ரீ லங்கன் கார்கோ நிறுவன அதிகாரிகளிடம் போலி ஆவணத்தை சமர்ப்பித்து, குறித்த Oximeter தொகுதியை வெளியே கொண்டு வந்துள்ள நிலையில், வெளிச் செல்லும் நுழைவாயிலில் வைத்து சுங்க அதிகாரிகளால் மேற்கொண்ட சோதனையில், குறித்த ஆவணங்கள் தொடர்பில் சுங்கத்தினதோ, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையினதோ அனுமதி தொடர்பான எந்தவொரு குறிப்பும் இருக்கவில்லையெனவும், அது தொடர்பில் எந்தவொரு வரியும் செலுத்தப்படவில்லையெனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment