அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தமானது மிகப்பாரிய காட்டிக் கொடுப்பாகும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தமானது மிகப்பாரிய காட்டிக் கொடுப்பாகும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(நா.தனுஜா)

கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தமானது 'ஹெஜிங்' ஒப்பந்தத்தைப் போன்ற மிகப்பாரிய காட்டிக் கொடுப்பாகும். இந்த மோசமான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் 'கற்தூண்களாக' மாறிவிட்டதிலிருந்து அவர்களின் நிலையென்ன என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. அரசாங்கத்தின் இந்தத் தன்னிச்சையானதும் மிக மோசமானதுமான செயற்பாட்டைக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, அதனை முற்றிலும் எதிர்க்கின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

'கெரவலப்பிட்டியை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்து' என்ற தலைப்பில் சஜித் பிரேமதாஸ இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கத் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டமைக்கான காரணம் என்ன? அதுமாத்திரமன்றி இதனால் சர்வதேச நாடுகளுடன் இராஜதந்திர ரீதியான நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில் அதனை எவ்வாறு கையாள்வது? என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

'ஹெஜிங்' உடன்படிக்கையைப் போன்ற மிகப்பாரிய காட்டிக் கொடுப்பு இந்த உடன்படிக்கை ஊடாகவும் செய்யப்படுகின்றது. இந்த மோசமான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது அமைச்சரவை உறுப்பினர்கள் 'கற்தூண்களாக' மாறிவிட்டதிலிருந்து அவர்கள் தற்போதுள்ள நிலையை நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது. எனவே அரசாங்கத்தின் இந்தத் தன்னிச்சையானதும் மிக மோசமானதுமான செயற்பாட்டை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment