இலங்கையில் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் 81 இலட்சத்து 69 ஆயிரத்து 232 பேர் - முதல் டோஸ் பெற்றவர்கள் ஒரு கோடியே 24 இலட்சத்து 68 ஆயிரத்து 949 பேர் - News View

Breaking

Wednesday, September 1, 2021

இலங்கையில் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் 81 இலட்சத்து 69 ஆயிரத்து 232 பேர் - முதல் டோஸ் பெற்றவர்கள் ஒரு கோடியே 24 இலட்சத்து 68 ஆயிரத்து 949 பேர்

இலங்கையில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாகப் பெற்றவர்களின் எண்ணிக்கை 81 இலட்சத்து 69 ஆயிரத்து 232ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 24 இலட்சத்து 68 ஆயிரத்து 949 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (31) மாத்திரம் 41 ஆயிரத்து166 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்துடன் 04 இலட்சத்து 42 ஆயிரத்து 237 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 04 ஆயிரத்து 18 பேருக்கு கொவிஸீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 485 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் (31) செலுத்தப்பட்டுள்ளன.

மேலும் 17 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் ஆயிரத்து 645 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் (31) செலுத்தப்பட்டுள்ளன.

அதேபோல 169 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸும் 21 ஆயிரத்து 405 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் (31) செலுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment