இலங்கை - தென்னாபிரிக்கா மோதும் முதல் போட்டி இன்று : மிகப்பெரிய நன்மை இருப்பதாக கூறுகிறார் தசூன் சானக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, September 2, 2021

இலங்கை - தென்னாபிரிக்கா மோதும் முதல் போட்டி இன்று : மிகப்பெரிய நன்மை இருப்பதாக கூறுகிறார் தசூன் சானக்க

இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் இன்று (2) ஆரம்பமாகிறது.

அதன்படி முதலாவதாக இடம்பெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகும்.

இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரின் வெற்றியின் மூலம், இலங்கை அணிக்கு போட்டிகளில் வெற்றி பெறுவதில் வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தரவரிசையில் தென்னாபிரிக்க அணி இலங்கையை விட முன்னிலையில் இருந்தாலும், தாசுன் ஷனகா தனது அணிக்கு போட்டியில் மிகப்பெரிய நன்மை இருப்பதாக கூறுகிறார்.

தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் நன்றாக துடுப்பெடுத்தாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். முதல் 10 ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்காமல் போட்டியை எதிர்கொள்ள முடிந்தால், அது எங்களுக்கு ஒரு பெரிய நன்மை. நாங்கள் அதை செய்ய முடியும் என்று நான் நினைக்கிறோம் என்று தசூன் சானக்க தெரிவித்துள்ளார்.

பேட்ஸ்மேன்கள் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் இலங்கை அணித் தலைவர், பந்து வீச்சாளர்கள் பூரண நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளார்.

குறிப்பாக தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களை விட இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மீது தனக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்றார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் இலங்கையில் ஆறு பேட்ஸ்மேன்கள், இரண்டு ஆல்-ரவுண்டர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

பந்து வீச்சாளராக தசுன் ஷனகாவின் முன்னேற்றம் அணிக்கு சம நிலைப்படுத்துவதை எளிதாக்கும். உப தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் சரித் அசலங்கா ஆகியோரின் பந்துவீச்சு திறனும் ஒரு சிறப்பு பந்து வீச்சாளர்களின் சேவையுடன் அணிக்கு மேலதிக நன்மையை அளிக்கும்.

இதனிடையே "ஒரு அணியாக, எங்களுக்கு வெற்றி மனநிலை உள்ளது. குறிப்பாக எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடிந்தால் நாங்கள் போட்டியில் வெல்ல முடியும் என்று நினைக்கிறேன். எனவே, இந்த போட்டி எங்களுக்கு நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று நான் நம்புகிறேன் ”என்று தசூன் சானக்க சுட்டிக்காட்டினார்.

எனினும் தரவரிசையில் 5 ஆவது இடத்தில் உள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டி எளிதானது அல்ல என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கசப்பான தோல்வியுடன் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணி இந்த போட்டியில் பங்கெடுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment