இலங்கையில் கொரோனாவுக்கு பலியான 6 நாட்களான குழந்தை - News View

Breaking

Monday, September 13, 2021

இலங்கையில் கொரோனாவுக்கு பலியான 6 நாட்களான குழந்தை

கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் பலாங்கொடை பிரதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 6 நாட்களேயான சிசுவொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிசுவின் இறுதி கிரிகைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றன.

கடந்த 7 ஆம் திகதி பிறந்த குறித்த சிசு சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளானமையால், பலாங்கொடை பிரதான வைத்தியசாலையின் குழைந்தைகள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிசு உயிரிழந்ததன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad