இதுவரை 6,667 கோடி ரூபா இலங்கை அரசாங்கம் செலவு - News View

Breaking

Monday, September 13, 2021

இதுவரை 6,667 கோடி ரூபா இலங்கை அரசாங்கம் செலவு

இலங்கையில் கொவிட்19 ஒழிப்புக்காக இதுவரை 6,667 கோடி ரூபாவை அரசாங்கம் செலவு செய்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன நேற்று (13) தெரிவித்துள்ளார். 

இந்த தொகையில் 4,622 கோடி ரூபா (46,223,305,834) அரசாங்கம் செலுத்தியுள்ளதுடன் மேலும் 2,045 கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சைனோபாம், பைஸர், ஸ்புட்னிக் வீ, மற்றும் கொவிஷீல்ட் போன்ற தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கே இவ்வாறு செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் போது தேவைப்படும் விமான சேவை கட்டணம், குளிரூட்டி வசதி கட்டணம் உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக 42 கோடியே 73 இலட்சத்து 51,794, ரூபாயைஅரசாங்கம் செலவு செய்துள்ளது.

கடந்த 08 ஆம் திகதியளவில் இலங்கைக்கு நன்கொடையாக 764,000 டோஸ் கொவிஷீல்ட் தடுப்பூசிகளும் அஸ்ட்ரா செனெகா டோஸ் 14, 55,840 தடுப்பூசிகளும் 1,06,020 டோஸ் பைஸர் தடுப்பூசிகளுமாக மொத்தம் 68,25,960 தடுப்பூசிகள் நன்கொடையாக கிடைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad